Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 54)
Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி
ஏதே பூதகணாஸ்ததேந்த்ரிய கணா தேவாச்ச ஜாதா: ப்ருதக் நோ சேகுர்புவனாண்ட நிர்மிதி விதௌ தேவைரமீபிஸ்ததா த்வம் நாநாவித ஸூக்திபிர்நுதகுணஸ்தத்வாந்யமூந்யாவிசம் சேஷ்டா சக்திமுதீர்ய தானி கடயந் ஹைரண்ய மண்டம் வ்யதா: ஏதே பூதகணா: ததா இந்த்ரிய கணா தேவா: ச ஜாதா: ப்ருதக் நோ சேகு: புவந அண்ட நிர்மிதி விதௌ தேவை: அமீபி: ததா த்வம் நாநாவித ஸூக்திபி: நுத குண: தத்வாநி அமூநி ஆவிசந் சேஷ்டா சக்திம் உதீர்ய தாநி கடயந் ஹைரண்யம் அண்டம் வ்யதா: एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता पृथङ् - नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा । त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्वान्यमून्याविशं - श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधाः
குருவாயூரப்பா! இப்படியாகத் தோன்றிய பஞ்சபூதங்கள் ஐந்தும், அவற்றின் தேவதைகளும் தனித்தனியாக இருந்தன. ஆகவே அவற்றால் எந்த ஸ்ருஷ்டியையும் செய்ய இயலவில்லை. அப்போது அந்தத் தேவதைகள் பலவிதமான ஸ்தோத்திரங்கள் மூலம் உன்னையும் உனது திருக்கல்யாண குணங்களையும் துதித்தன. உடனே நீ மஹத் போன்ற தத்துவங்களில் புகுந்து, உண்டாக்கும் சக்தியை அவற்றுக்கு அளித்தாய். அதன் மூலம் பொன் போன்ற ப்ரஹ்மாண்டம் உருவானது.