Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 53)

Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி

சப்தாத் வ்யோம தத: ஸஸர்ஜித விபோ ஸ்பர்சம் ததோ மாருதம் தஸ்மாத் ரூபமதோ மஹோSத ச ரஸம் தோயம் ச கந்தம் மஹீம் ஏவம் மாதவ பூர்வ பூர்வ கலநாதாத்யாத்ய தர்மாந்விதம் பூதக்ராமமிமம் த்வமேவ பகவந் ப்ராகாசயஸ்தாமஸாத் சப்தாத் வ்யோம தத: ஸஸர்ஜித விபோ ஸ்பர்சம் ததோ மாருதம் தஸ்மாத் ரூபம் அத: மஹ: அத ச ரஸம் தோயம் ச கந்தம் மஹீம் ஏவம் மாதவ பூர்வ பூர்வ கலநாத் ஆத்ய ஆத்ய தர்ம அந்விதம் பூத க்ராமம் இமம் த்வமேவ பகவந் ப்ராகாசய: தாமஸாத் शब्दाद्व्योम ततः ससर्जिथ विभो ! स्पर्शं ततो मारुतं तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् । एवम् माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात्

மஹாலக்ஷ்மி என்றும் உறைபவனே (மாதவ)! குருவாயூரப்பா! பகவானே! ஓசையிலிருந்து ஆகாசமும், ஆகாசத்திலிருந்து ஸ்பர்ஸ (தொடு) உணர்ச்சியும், ஸ்பர்ஸத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து ரூபமும், ரூபத்திலிருந்து அக்னியும் உண்டானது. அக்னியிலிருந்து ரஸமும், ரஸத்திலிருந்து நீரும், நீரிலிருந்து மணமும், மணத்திலிருந்து பூமியும் உண்டானது. இப்படியாக வரிசையாக பஞ்சபூதங்களை நீ தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோற்றுவித்தாய் அல்லவோ? (விளக்கம் காண்க)விளக்கம் – ஒவ்வொரு பூதமும் தன்னை உண்டாக்கிய பூதத்தின் தன்மையையும் சேர்த்துக் கொண்டு விளங்குகிறது. ஆகாசம் என்பது கேட்டல் வடிவம் மட்டுமே கொண்டது (அதாவது ஓசை), வாயு என்பது “தொடுதல், கேட்டல்” வடிவங்களைக் கொண்டது, அக்னி என்பது “காணுதல், தொடுதல், கேட்டல்” வடிவங்களைக் கொண்டது, நீர் என்பது “சுவை, காணுதல், தொடுதல், கேட்டல்” வடிவங்களைக் கொண்டது, பூமி என்பது “மணம், சுவை, காணுதல், தொடுதல், கேட்டல்” வடிவங்களைக் கொண்டது.