Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 51)

Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி

ஸோSஹம் ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாமாஸாத்ய வைகாரிகோ பூயஸ்தைஜஸ தாமஸாவிதி பவந்நாத்யேந ஸர்வாத்மநா தேவாநிந்த்ரியமாநிநோSக்ருத திசாவாதார்க்க பாச்யச்விநோ வஹ்நீந்த்ராச்யுத மித்ரகாந் விதுவிதி ஸ்ரீருத்ர சாரீரகாந் ஸ: அஹம் ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாம் ஆஸாத்ய வைகாரிகோ பூய: தைஜஸ தாமஸௌ இதி பவந் ஆத்யேந ஸர்வாத்மநா தேவாந் இந்த்ரியம் ஆநிந: அக்ருத திசா வாத அர்க்க பாசி அச்விந: வஹ்நீ இந்த்ர அச்யுத மித்ரகாந் விது விதி ஸ்ரீருத்ர சாரீரகாந் सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्वात्मना । देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान्

குருவாயூரப்பா! மேலே கூறிய அஹங்காரம் என்பது மூன்று குணங்களாக உருவெடுத்தது. அவையாவன - வைகாரிகம் (இது ஸத்வ குணம் ஆகும்), தைஜஸம் (இது ராஜஸ குணம் ஆகும்) மற்றும் தாமஸம் ஆகும். இவற்றுள் முதலாவதாக உள்ள ஸத்வ குணத்தில் இருந்து இந்த்ரியங்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் தேவதைகளான திசைகள், வாயு, சூரியன், வருணன், அச்வினிகள், அக்னி, இந்திரன், உபேந்த்ரன், மித்ரன், ப்ரஜாபதி, சந்திரன், நான்முகன், ருத்ரன், க்ஷேத்ரஜ்ஞன் ஆகியோர் தோன்றினர் (விளக்கம் காண்க).விளக்கம் – இவை முறையே கேட்டல், தொடுதலை உணர்தல், பார்த்தல், சுவையை அறிதல், நுகர்தல், பேசுதல், கைகள், கால்கள், வெளியேற்றுதல், மர்ம உறுப்புகள், மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம் ஆகியவற்றின் தேவதைகள் ஆகும்.