Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 49)

Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி

மாயா ஸந்நிஹிதோSப்ரவிஷ்ட வபுஷா லாக்ஷீதி கீதோ பவாந் பேதைஸ்தாம் ப்ரதிபிம்பதோ விவிசிவாந் ஜீவோSபி நைவாபர: காலாதி ப்ரதிபோதிதாSத பவதா ஸம்சோதிதா ச ஸ்வயம் மாயா ஸா கலு புத்தி தத்வமஸ்ருஜத்யோSஸௌ மஹாநுச்யதே மாயா ஸந்நிஹித: அப்ரவிஷ்ட வபுஷா லாக்ஷீ இதி கீத: பவாந் பேதை: தாம் ப்ரதிபிம்பத: விவிசிவாந் ஜீவ: அபி ந ஏவ அபர: காலாதி ப்ரதிபோதிதா அத பவதா ஸம்சோதிதா ச ஸ்வயம் மாயா ஸா கலு புத்தி தத்வம் அஸ்ருஜத் ய: அஸௌ மஹாந் உச்யதே मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षिति गीतो भवान् भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापरः । कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं माया स खलु बुद्धितत्वमसृजद्योऽसौ महानुच्यते

குருவாயூரப்பா! நீ மாயைக்கு அருகாமையில் இருந்தாலும் அதனுடன் கலக்காத ரூபத்துடன் உள்ளதால் உன்னைப் பலரும் ஸாக்ஷீ (பார்க்கக்கூடியவன்) என்று கூறுகின்றனர். அந்த மாயையின் ப்ரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் நீயே ஆவாய். உன்னால் ஏவப்பட்ட அந்த மாயையே காலம், கர்மம், ஸ்வபாவம் என்று பலவாக விளங்குகின்றது. அது “புத்தி தத்வம்” எனப்படும் மஹத் தத்வத்தை உண்டாக்கியது.