Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 48)

Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி

ஏவம் ச த்விபரார்த்த கால விகதாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம் பிப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபுவநீ பாவாய மாயா ஸ்வயம் மாயாத: கலு காலசக்திரகிலாத்ருஷ்டம் ஸ்வபாவோSபி ச ப்ராதுர்பூய குணாந் விகாஸ்ய விததுஸ்தஸ்யாஸ்ஸஹாயக்ரியாம் ஏவம் ச த்விபரார்த்த கால விகதௌ ஈக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம் பிப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபுவநீ பாவாய மாயா ஸ்வயம் மாயாத: கலு கால சக்தி: அகில அத்ருஷ்டம் ஸ்வபாவ: அபி ச ப்ராதுர்பூய குணாந் விகாஸ்ய விதது: தஸ்யா: ஸஹாயக்ரியாம் एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां विभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् । मायातः खलु कालशक्तिरखिलादृष्टां स्वभावोऽपि च प्रादुर्भूय गुणान् विकास्य विदधुस्तस्याः स्सहायक्रियाम्

குருவாயூரப்பா! மேலே கூறிய நிலையானது இரண்டு பரார்த்தம் முடிய நீடிக்க நீ நினைத்தாய் (இரு பரார்த்த காலம் - நான்முகனின் ஆயுள்). அந்தக் காலம் முடிந்த பின்னர் நீ ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் என்று விரும்பினாய் (இது உபநிஷத்தில் – தத் ஐக்ஷத பஹுஸ்யாம் - நான் பலவாகக் கடவேன் என்று உள்ளது). அதற்கான உன் பார்வையைக் கண்டு மாயை கலங்கியது. அந்த மாயையில் இருந்து காலம் என்னும் சக்தியும், கர்மங்களும், கர்மங்களுக்கு ஏற்ற ஸ்பாவங்களும் தோன்றி அவை மாயைக்கு உதவியாக இருந்தன.