Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 47)

Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி

கால: கர்ம குணாச்ச ஜீவநிவஹா விச்வம் ச கார்யம் விபோ சில்லீலா ரதிமேயுஷி த்வயி ததா நிர்லீநதாமாயயு: தேஷாம் நைவ வதந்த்யஸத்வமயி போ: சக்த்யாத்மநா திஷ்டதாம் நோ சேத் கிம் ககந ப்ரஸூந ஸத்ருசாம் பூயோ பவேத் ஸம்பவ: கால: கர்ம குணா: ச ஜீவநிவஹா விச்வம் ச கார்யம் விபோ சித் லீலாரதிம் ஏயுஷி த்வயி ததா நிர்லீநதாம் ஆயயு: தேஷாம் ந ஏவ வதந்தி அஸத்வம் அயி போ: சக்த்யாத்மநா திஷ்டதாம் நோ சேத் கிம் ககந ப்ரஸூந ஸத்ருசாம் பூயோ பவேத் ஸம்பவ: कालः कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययुः । तेषां नैव वदन्त्यसत्वमयि भोः शक्त्यात्मना तिष्टतां नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभवः ?

குருவாயூரப்பா! ப்ரளயத்திற்கு முன்பு நீ உனது உன்னதமான ஆனந்தமான லீலையில் இருந்தாய். அப்போது மூன்று குணங்கள், காலம், கர்மங்கள், அனைத்து உயிர்கள், கார்யமான ப்ரபஞ்சம் ஆகிய அனைத்துமே மறைவாக இருந்தன. அவை இல்லை என்று வேதங்கள் கூறவில்லை. அப்படி அவை இல்லாமல் இருந்தால் ஆகாயத்தாமரை போன்று மீண்டும் எப்படித் தோன்ற இயலும்? (ஆகாயத்தாமரை - கற்பனையான பொருள்).