Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 46)
Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி
வ்யக்தாவ்யக்தமிதம் ந கிஞ்சிதபவத் ப்ராக் ப்ராக்ருத ப்ரக்ஷயே மாயாயாம் குண ஸாம்ய ருத்த விக்ருதௌ த்வய்யாகதாயாம் லயம் நோ ம்ருத்யுச்ச ததாம்ருதம் ச ஸமபூந்நாஹ்நோ ந ராத்ரே: ஸ்திதி: தத்ரைகஸ்த்வமசிஷ்யதா: கில பராநந்த ப்ரகாசாத்மனா வ்யக்த அவ்யக்தம் இதம் ந கிஞ்சித் அபவத் ப்ராக் ப்ராக்ருத ப்ரக்ஷயே மாயாயாம் குண ஸாம்ய ருத்த விக்ருதௌ த்வயி ஆகதாயாம் லயம் நோ ம்ருத்யு: ச ததா அம்ருதம் ச ஸமபூத ந அஹ்ந: ந ராத்ரே: ஸ்திதி: தத்ர ஏக: த்வம் அசிஷ்யதா: கில பராநந்த ப்ரகாச ஆத்மனா व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत् प्राक्प्राकृतप्रक्षये मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् । नो मृत्युश्च तदामृतञ्च समभून्नाह्नो न रात्रेः स्थिति - स्तत्रैकस्त्वमशिष्यथाः किल परानन्दप्रकाशात्मना
குருவாயூரப்பா! முன்னர் மஹாப்ரளயம் உண்டானபோது ஸத்வ, ரஜஸ், தமஸ் குணங்கள் சமமாக இருந்தன. அப்போது மாயை உன்னிடம் ஒடுங்கியே இருந்தது. அச்சமயம் ஸ்தூலமாகவும் ஸூக்ஷ்மமாகவும் காணப்படும் இந்தப் ப்ரபஞ்சமே இல்லை. அப்போது பிறப்பும், இறப்பும், பகலும், இரவும் ஆகிய எதுவும் இல்லை. நீ மட்டுமே உனது ஆனந்தமான திருமேனியுடன் தனியாக இருந்தாய் அல்லவா? (விளக்கம் காண்க).விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் இரண்டாம் ஸ்கந்தம் அத்யாயம் ஐந்தில் உள்ள ச்லோகங்கள் 21 முதல் 35 முடிய இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.