Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 45)
Dasaka 4 - அஷ்டாங்க யோகம்
அர்ச்சிராதிகதிமீத்ருசீம் வ்ரஜந் விச்யுதிம் ந பஜதே ஜகத்பதே ஸச்சிதாத்மக பவத் குணோதயாநுச்சரந்த மநிலேச பாஹி மாம் அர்ச்சி: ஆதி கதிம் ஈத்ருசீம் வ்ரஜந் விச்யுதிம் ந பஜதே ஜகத்பதே ஸச்சிதாத்மக பவத் குண உதயாந் உச்சரந்தம் அநிலேச பாஹி மாம் अर्चिरादिगतिमीद्रुशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ! । सच्चिदात्मक ! भवद्गुणोदयानुच्चरन्तमनिलेश ! पाहि माम्
குருவாயூரப்பா! உலகின் பதியே! இப்படியாக அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று உன்னை அடைந்த யாரும் நழுவுவதில்லை. ஸத்தாகவும், சித்தாகவும், ஆநந்தமாகவும் உள்ள உனது திருக்கல்யாண குணங்களையே எண்ணி இருக்கும் என்னை நீ காப்பாயாக!***