Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 44)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

தஸ்ய ச க்ஷிதிபயோ மஹோSநிலத்யோ மஹத் ப்ரக்ருதி ஸப்தகாவ்ருதீ: தத்ததாத்மகதயா விசந் ஸுகி யாதி தே பதமநாவ்ருதம் விபோ தஸ்ய ச க்ஷிதி பயோ மஹ: அநில த்யோ மஹத் ப்ரக்ருதி ஸப்தக ஆவ்ருதீ: தத் தத் ஆத்மகதயா விசந் ஸுகி யாதி தே பதம் அநாவ்ருதம் விபோ तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृतीः । तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतम् विभो

எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! மேலே கூறியபடி ப்ரஹ்மாண்டத்தைத் துளைத்துச் செல்லும் உன் பக்தன், அந்தப் ப்ரஹ்மாண்டத்தைச் சுற்றியுள்ள பூமி, நீர், ஒளி, வாயு, ஆகாசம், மஹத், ப்ரக்ருதி ஆகியவற்றைக் கடக்கிறான். இவற்றைக் கடந்து, எதுவும் சூழாமல் நின்றுள்ள உன்னிடம் வந்து முக்தி அடைகிறான்.