Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 43)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

தத்ர வா தவ பதேSதவா வஸந் ப்ராக்ருத ப்ரளய ஏதி முக்ததாம் ஸ்வேச்சயா கலு புரா விமுச்யதே ஸம்விபித்ய ஜகதண்டமோஜஸா தத்ர வா தவ பதே அதவா வஸந் ப்ராக்ருத ப்ரளய ஏதி முக்ததாம் ஸ்வ இச்சயா கலு புரா விமுச்யதே ஸம்விபித்ய ஜகத் அண்டம் ஓஜஸா तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्ततां । स्वेच्छया खलु पुराऽपि मुच्यते संविभिद्य जगदण्डमोजसा

குருவாயூரப்பா! இப்படியாக உனது பக்தன் மஹர்லோகத்தில் (அல்லது ப்ரஹ்மலோகத்தில்) வசித்தபடி இருப்பான். பின்னர் ப்ராக்ருத ப்ரளயம் உண்டாகும்போது மோக்ஷம் அடைகிறான். அல்லது, தான் எப்போது விருப்பப்படுகிறானோ அப்போது, தனது யோக சக்தியால் ப்ரஹ்மாண்டத்தைத் துளைத்துக் கொண்டு மோக்ஷம் அடைகிறான் (விளக்கம் காண்க).விளக்கம் – நான்முகனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும். இது 4, 32, 00, 00, 000 மனித வருடங்கள் ஆகும். இதே கால அளவும் கொண்டதாக நான்முகனின் ஒரு இரவு உள்ளது. இந்த இரவுப் பொழுதில், அனைத்து ஸ்ருஷ்டிகளும் சென்று நான்முகனில் லயிக்கின்றன. இதுவே நைமித்திக ப்ரளயம் எனப்படும். அடுத்த நாளின் தொடக்கத்தில் மீண்டும் ஸ்ருஷ்டி ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கல்பம் எனப்படும். இப்போது நாம் உள்ள கல்பமானது “ஸ்வேத வராஹ கல்பம்” ஆகும். இது போன்று 360 நாட்கள் கொண்டது நான்முகனின் ஒரு வருடம் ஆகும். இது போன்று நூறு வருடங்கள் என்பது நான்முகனின் ஆயுட்காலம் ஆகும். இது தலா 50 வருடங்கள் கொண்ட இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை பரார்த்தம் எனப்படும். தற்போது நாம் த்விபரார்த்தம் என்னும் இரண்டாம் 50 வருட காலத்தில் உள்ளோம். இதன் முடிவில் ப்ராக்ருத ப்ரளயம் ஏற்பட்டு, அனைத்தும் சென்று ப்ரஹ்மத்தில் லயிக்கின்றன.