Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 41)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

அக்னி வாஸர வலர்க்ஷ பக்ஷகைருத்தராயண ஜுஷா ச தைவதை: ப்ராபிதோ ரவிபதம் பவத்பரோ மோதவான் த்ருவபதாந்தமீயதே அக்னி வாஸர வலர்க்ஷ பக்ஷகை: உத்தராயண ஜுஷா ச தைவதை: ப்ராபிதோ ரவிபதம் பவத் பரோ மோதவான் த்ருவபதாந்தம் ஈயதே अग्निवासरवलर्क्षपक्शगैरुत्तरायणजुषा च दैवतैः । प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते

குருவாயூரப்பா! ப்ரஹ்மலோகத்தை அடைய விரும்பும் உன்னுடைய பக்தன் ஒருவன் அக்னி, பகல் நேரம், சுக்லபக்ஷம், உத்தராயணம் ஆகிய தேவதைகளால் சூரியமண்டலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கும் அவன், பின்னர் த்ருவலோகம் செல்கிறான்.