Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 40)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

லிங்கதேஹமபி ஸந்த்யஜந்நதோ லீயதே த்வயி பரே நிராக்ரஹ: ஊர்த்வ லோக குதுகீ து மூர்த்த: ஸார்தமேவ கரணைர்நிரீயதே லிங்க தேஹம் அபி ஸந்த்யஜந் அத: லீயதே த்வயி பரே நிராக்ரஹ: ஊர்த்வ லோக குதுகீ து மூர்த்த: ஸார்தம் ஏவ கரணை: நிரீயதே लिङ्गदेहमपि संत्यजन्नथो लीयते त्वयि परे निराग्रहः । ऊर्ध्वलोककुतुकी तु मूर्धतस्सार्धमेव करणैर्निरीयते

குருவாயூரப்பா! ப்ரஹ்மலோகத்தை விரும்பாமல், உன்னில் வந்து கலக்கும் மோக்ஷத்தை விரும்பும் ஒருவன், தனது சக்தியை ஆஜ்ஞை சக்கரத்திற்குக் கொண்டு சென்று, ஸூக்ஷ்ம உடலையும் விடுத்து உன்னை வந்து சேர்கிறான் (இது விதேஹ முக்தி எனப்படும்). ப்ரஹ்மலோகத்தை விரும்பும் ஒருவன் தன்னுடைய ஐந்து ப்ராணன்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்த்ரியங்கள், மனம், புத்தி ஆகியவற்றுடன் கூடிய ஸூக்ஷ்ம உடலுடன் தலையில் உள்ள ப்ரஹ்மரந்த்ரம் வழியே வெளிக் கிளம்புகிறான் (இது க்ரம முக்தி எனப்படும்).