Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 39)
Dasaka 4 - அஷ்டாங்க யோகம்
த்வத் ஸமாதி விஜயே து ய: புநர்மங்ஷு மோக்ஷரஸிக: க்ரமேண வா யோகவச்யமநிலம் ஷடாச்ரயைருந்நயத்யஜ ஸுஷும்நயா சநை: த்வத் ஸமாதி விஜயே து ய: புந: மங்ஷு மோக்ஷ ரஸிக: க்ரமேண வா யோகவச்யம் அநிலம் ஷட் ஆச்ரயை: உந்நயதி அஜ ஸுஷும்நயா சநை: त्वत्समाधिविजये तु यः पुनर्मङ्क्षु मोक्षरसिकः क्रमेण वा । योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज ! सुषुम्नया शनैः
குருவாயூரப்பா! பிறப்பில்லாதவனே! இப்படியாக உன்னிடம் ஸமாதி நிலையை அடைந்த யோகிகள், மோக்ஷ முக்தியோ அல்லது க்ரம முக்தியோ (தெய்வீகமான பிறப்புகளைப் பெறுவது) அடைய விரும்புகின்றனர். இதற்காக ப்ராணவாயுவை தனது ஸூக்ஷ்ம நாடி வழியாக ஆறுவிதமான ஆதாரங்களைக் கடந்து மெதுவாக மேலே எழுப்பிச் செல்கிறார்கள் (ஆறு ஆதாரங்கள் - முதுகெலும்பில் உள்ள ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆஜ்ஞை மற்றும் மூலாதாரம்).