Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 38)
Dasaka 4 - அஷ்டாங்க யோகம்
இத்தமப்யஸன நிர்ப்பரோல்லஸத் த்வத் பராத்மஸுக கல்பிதோத்ஸவா: முக்த பக்த குல மௌலிதாம் கதா: ஸஞ்சரேம சுக நாரதாதிவத் இத்தம் அப்யஸந் அநிர்ப்பர உல்லஸத் த்வத் பராத்ம ஸுக கல்பித் உத்ஸவா: முக்த பக்த குல மௌலிதாம் கதா: ஸஞ்சரேம சுக நாரத ஆதிவத் इत्थमभ्यसननिर्भरोल्लसत्वत्परात्मसुखकल्पितोत्सवाः । मुक्तभक्तकुलमौलितां गतास्सञ्चरेम शुकनारदादिवत्
குருவாயூரப்பா! இப்படியாக மீண்டும் த்யானம் முதலியவற்றைப் பின்பற்றுவதால் உன்னுடைய ப்ரஹ்மரூபம் எங்களுக்குள் நீங்காமல் உள்ளது. இதனால் மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கி உள்ளோம். இதன் விளைவாக பக்தர்களில் சிறந்து விளங்கி, நாரதர் முதலானவர்களைப் போல் எங்கும் சென்று வருவோம்.