Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 36)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

த்யாயதாம் ஸகல மூர்த்திமீத்ருசீமுந்மிஷந் மதுரதாஹ்ருதாத்மனாம் ஸாந்த்ர மோதரஸ ரூபமாந்தரம் ப்ரஹ்ம ரூபமயி தேSவபாஸதே த்யாயதாம் ஸகல மூர்த்திம் ஈத்ருசீம் உந்மிஷந் மதுரதா ஹ்ருத ஆத்மனாம் ஸாந்த்ர மோத ரஸ ரூபம் ஆந்தரம் ப்ரஹ்ம ரூபம் அயி தே அவபாஸதே ध्यायतां सकलमूर्तिमीद्रुशीमुन्मिषन्मधुरताहृतात्मनाम् । सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्मरूपमयि तेऽवभासते

குருவாயூரப்பா! இப்படியாக உனது பூர்ணமான திருமேனியை மனதில் எப்போதும் த்யானிப்பவர்கள் அந்த அழகினால் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் பின்னர் உனது ஆனந்தமே உருவான ப்ரஹ்ம ரூபமானது என்றும் அவர்கள் மனதில் ஒளிவீசிக்கொண்டு விளங்குகிறது.

இங்கு அஷ்டாங்க யோகத்தின் அடுத்த அங்கமான ஸமாதி என்பது கூறப்பட்டது.