Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 35)
Dasaka 4 - அஷ்டாங்க யோகம்
விஸ்புடாவயவ பேத ஸுந்தரம் த்வத் வபு: ஸுசிர சீலனாவசாத் அச்ரமம் மனஸி சிந்தயாமஹே த்யானயோக நிரதாஸ்த்வதாச்ரயா: விஸ்புட அவயவ பேத ஸுந்தரம் த்வத் வபு: ஸுசிர சீலனாவசாத் அச்ரமம் மனஸி சிந்தயாமஹே த்யானயோக நிரதா: த்வத் ஆச்ரயா: विस्पुटावयवभेदसुन्दरं त्वद्वपुस्सुचिरशीलनावशात् । अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः
குருவாயூரப்பா! உன்னைக் குறித்து நாங்கள் த்யானத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அதிகமான நாட்கள் த்யானித்து அதன் பலனாக உனது திருமேனியில் உள்ள பல்வேறு உறுப்புகளின் எழிலையும் அனுபவிப்போமாக. அதன் பின்னர் உனது திருமேனி எங்கள் உள்ளத்தில் என்றும் த்யானப் பொருளாக நிற்கும்.
இங்கு அஷ்டாங்க யோகத்தின் அடுத்த அங்கமான த்யானம் என்பது கூறப்பட்டது.