Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 34)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

அஸ்புடே வபுஷி தே ப்ரயத்னதோ தாரயேம திஷணாம் முஹுர்முஹு: தேந பக்திரஸமந்தரார்த்ரதாமுத்வஹேம பவதங்க்ரி சிந்தகா: அஸ்புடே வபுஷி தே ப்ரயத்னதோ தாரயேம திஷணாம் முஹு: முஹு: தேந பக்திரஸம் அந்த: ஆர்த்ரதாம் உத்வஹேம பவத் அங்க்ரி சிந்தகா: अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहुः । तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तकाः

குருவாயூரப்பா! உன்னுடைய திருமேனி எப்படி உள்ளது என்று வேதங்களாலும் முழுவதுமாக விளக்க இயலாது. இதனால், அந்தத் திருமேனி எங்கள் மனதில் தெளிவாகத் தோன்றி இருக்க மீண்டும் மீண்டும் மனதை ஒருநிலைப்படுத்துவோம். இதன் மூலம் உனது திருவடியைத் த்யானிக்கும் பேறு பெற்று, பக்தி அனுபவமும், இதய நெகிழ்வும் அடைவோம்.

இங்கு அஷ்டாங்க யோகத்தின் அடுத்த அங்கமான தாரணை என்பது கூறப்பட்டது. இது மனதை ஒருநிலைப்படுத்துவதாகும்.