Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 33)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

தாரமந்தரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபியம்ய நிர்மலா: இந்த்ரியாணி விஷயாதபஹ்ருத்யாஸ்மஹே பவதுபாசனோந்முகா: தாரம் அந்தரம் அநுசிந்த்ய ஸந்ததம் ப்ராண வாயும் அபியம்ய நிர்மலா: இந்த்ரியாணி விஷயாத் அபஹ்ருத்ய ஆஸ்மஹே பவத் உபாசன உந்முகா: तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मलाः । इन्द्रियाणि विषयादथापहृत्याऽऽस्महे भवदुपासनोन्मुखाः

குருவாயூரப்பா! நாங்கள் மேலே கூறியபடி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு “ஓம்” என்னும் ப்ரணவ மந்திரத்தை மனதால் த்யானித்தும், ப்ராணாயாமம் செய்தும் எங்களை பரிசுத்தம் ஆனவர்களாக மாற்றிக் கொள்கிறோம். மேலும் இந்த்ரியங்களை அவற்றுக்கு உரிய விஷயங்களிலிருந்து திசை திருப்பி, உன்னை உபாஸிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளோம்.விளக்கம் – இங்கு அஷ்டாங்க யோகத்தின் இரண்டு அங்கங்களான ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆசனம் ஆகியவை கூறப்பட்டன.