Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 32)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

ப்ரஹ்மசர்ய த்ருடதாதிபிர் யமைராப்லவாதி நியமைச்ச பாவிதா: குர்மஹே த்ருடமமீ ஸுகாஸனம் பங்கஜாத்யமபி வா பவத்பரா: ப்ரஹ்மசர்ய த்ருடதா ஆதிபி: யமை: ஆப்லவ ஆதி நியமை: ச பாவிதா: குர்மஹே த்ருடம் அமீ ஸுகாஸனம் பங்கஜ ஆத்யம் அபி வா பவத் பரா: ब्रह्मचर्यद्रुढतादिभिर्यमैराप्लवादिनियमैश्च पाविताः । कुर्महे द्रुढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्पराः

குருவாயூரப்பா! உனது அருளையே நம்பியுள்ள நாங்கள் சுத்தமானவர்களாக இருப்போம். எப்படி? ப்ரம்மச்சர்யம் போன்ற யமம், குளித்தல் போன்ற நியமம், பத்மாசனம், ஸுகாஸனம் போன்ற ஆசனம் ஆகிய இவற்றால் ஆகும்.விளக்கம் – அஷ்டாங்க யோகத்தின் ஒரு அங்கமான யமம் என்பது அஹிம்ஸை, ஸத்யம் (உண்மையே பேசுதல்), அஸ்தேயம் (திருடாமல் இருத்தல்), ப்ரம்மசர்யம், அபரிக்ரஹம் (தேவையற்ற சொத்து சேர்க்காமை) என்னும் ஐந்து அங்கங்கள் கொண்டதாகும். நியமம் என்பது சௌசம் (தூய்மை), ஸந்தோஷம் (மனநிறைவு), ஸ்வாத்யயம் (வேதங்களைக் கற்றல்), தவம், ஈச்வரப்ரணிதானம் (பகவானை வணங்குதல்) என்னும் ஐந்து அங்கங்கள் கொண்டதாகும். ஆக இங்கு அஷ்டாங்க யோகத்தின் மூன்று அங்கங்களான யமம், நியமம் மற்றும் ஆசனம் ஆகியவை கூறப்பட்டன.