Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 31)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே பவதுபாஸனம் யயா ஸ்பஷ்டமஷ்டவித யோகசர்யயா புஷ்டயாசு தவ துஷ்டிமாப்நுயாம் கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே பவத் உபாஸனம் யயா ஸ்பஷ்டம் அஷ்ட வித யோக சர்யயா புஷ்டய ஆசு தவ துஷ்டிம் ஆப்நுயாம் कल्यताम् मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया । स्पष्टमष्टविध योगचर्यया पुष्टयाऽऽशु तव तुष्टिमाप्नुयाम्

குருவாயூரப்பா! உன்னை வணங்க எனது உடலுக்கு எந்த அளவு ஆரோக்யம் இருக்கவேண்டுமோ அதனை மட்டும் அளிப்பாயாக. அதன் மூலம் நான் அஷ்டாங்க யோகம் புரிந்து உனது அருளைப் பெற்று விடுவேன்.விளக்கம் – அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்கள் கொண்டதான பதஞ்ஜலியின் யோகம் ஆகும். அந்த எட்டு அங்கங்களாவன – யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யானம் மற்றும் ஸமாதி ஆகும்.