Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 30)

Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை

கிம் உக்தைர் பூயோபிஸ்தவ ஹி கருணா யாவதுதியாத் அஹம் தாவத்தேவ ! ப்ரஹித விவிதார்த்த ப்ரலபித: புர: க்லுப்தே பாதே வரத தவ நேஷ்யாமி திவஸாந் யதாசக்தி வ்யக்தம் நதிநுதிநிவேஷா விரசயந்: கிம் உக்தை: பூயோபி: தவ ஹி கருணா யாவத் உதியாத் அஹம் தாவத் தேவ ! ப்ரஹித விவித ஆர்த்த ப்ரலபித: புர: க்லுப்தே பாதே வரத தவ நேஷ்யாமி திவஸாந் யதாசக்தி வ்யக்தம் நதி நுதி நிவேஷா விரசயந்: किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया - दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः । पुरः क्लृप्ते पादे वरद ! तव नेष्यामि दिवसान् यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन्

குருவாயூரப்பா! மீண்டும் மீண்டும் கூறுவதால் உண்டாகும் பயன் என்ன? என் மீது உனக்குக் கருணை ஏற்படும்வரை நான் புலம்புவதை விடப்போவதில்லை. உனது திருவடிகளில் சரணம் என்று புகுந்து வணங்கி, துதித்து, ஆராதிக்கப் போகிறேன். இப்படியே எனது நாட்களை நான் கழிக்கிறேன்.***