Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 29)

Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை

மருத்கேஹாதீச த்வயி கலு பாரஞ்சோSபி ஸுகினோ பவத் ஸ்நேஹீ ஸோSஹம் ஸுபஹு பரிதப்யே ச கிமிதம் அகீர்த்திஸ்தே மா பூத்வரத கதபாரம் ப்ரசமயந் பவத் பக்தோத்தம்ஸம் ஜடிதி குரு மாம் கம்ஸதமன ! மருத் கேஹ அதீச த்வயி கலு பாரஞ்ச: அபி ஸுகினோ பவத் ஸ்நேஹீ ஸ: அஹம் ஸுபஹு பரிதப்யே ச கிம் இதம் அகீர்த்தி: தே மா பூத் வரத கதபாரம் ப்ரசமயந் பவத் பக்த உத்தம்ஸம் ஜடிதி குரு மாம் கம்ஸதமன ! मरुद्गेहाधीश ! त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ? । अकीर्तिस्ते माभूद्वरद ! गदभारं प्रशमयन् भवत्भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन !

குருவாயூரப்பா! கம்ஸனை அழித்தவனே! வரங்களை அளிப்பவனே! உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் கவலையின்றி உள்ளனர். உன்னிடம் மிகுந்த பக்தி உடைய நான் சிரமப்படுகிறேன். இது ஆச்சர்யமாக உள்ளது. இதனால் உன்னை அடைந்தவர்களை நீ காப்பற்றவதில்லை என்று அவப்பெயர் உனக்கு வரக்கூடாது. என்னுடைய வ்யாதிகளை நீக்கி என்னை உனக்குச் சிறந்த அடியவனாக ஏற்க வேண்டும்.