Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 28)
Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை
ப்ரபூதாதி வ்யாதி ப்ரஸப சலிதே மாமக ஹ்ருதி த்வதீயம் தத் ரூபம் பரமஸுக சித்ரூபமுதியாத் உதஞ்சத் ரோமாஞ்சோ கலித பஹு ஹர்ஷாச்ரு நிவாஹோ யதா விஸ்மர்யாஸம் துருபசம பீடாபரிபவான் ப்ரபூத ஆதி வ்யாதி ப்ரஸப சலிதே மாமக ஹ்ருதி த்வதீயம் தத் ரூபம் பரம ஸுக சித் ரூபம் உதியாத் உதஞ்சத் ரோமாஞ்சோ கலித பஹு ஹர்ஷ அச்ரு நிவாஹோ யதா விஸ்மர்யாஸம் துருபசம பீடா பரிபவான் प्रभूताधिव्याधि-प्रसभचलिते मामकहृदि त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् । उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान्
குருவாயூரப்பா! என்னுடைய உள்ளமானது எனக்கு ஏற்பட்டுள்ள மிகுந்த துன்பங்களாலும் நோய்களாலும் கலக்கமுடன் உள்ளது. அவை நீங்கவேண்டும் என்றால், அந்த உள்ளத்தில் உனது திருமேனி தெரிய வேண்டும். அப்படித் தோன்றும் நேரத்தில் நான் மயிர்க்கூச்சல் பெற்று, கண்கள் ஆனந்தக் கண்ணீர் விடுத்து, அதனால் இந்தத் துயரங்களை மறந்து விடுவேன். இதனை நீ அருளவேண்டும்.