Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 27)
Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை
விதூய க்லேசாந்மே குரு சரணயுக்மம் த்ருதரஸம் பவத் க்ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜந விதௌ பவந்மூர்த்யாலோகே நயனமத தே பாததுளஸீ பரிக்ராணே க்ராணம் ச்ரவணமபி தே சாருசரிதே விதூய க்லேசாந் மே குரு சரண யுக்மம் த்ருத ரஸம் பவத் க்ஷேத்ர ப்ராப்தௌ கரம் அபி ச தே பூஜந விதௌ பவத் மூர்த்தி ஆலோகே நயனம் அத தே பாததுளஸீ பரிக்ராணே க்ராணம் ச்ரவணம் அபி தே சாரு சரிதே विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ । भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी - परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते
குருவாயூரப்பா! நீ என்னுடைய துயரம் அனைத்தையும் நீக்க வேண்டும். எனது கால்கள் உனது கோயிலை அடையும்படி செய்ய வேண்டும். எனது கைகள் உன்னை பூஜை செய்யவேண்டும். எனது கண்கள் உனது திருமேனியை மட்டுமே காணவேண்டும். எனது மூக்கு உனது திருவடிகளில் உள்ள துளசியை மட்டுமே நுகர வேண்டும். எனது காதுகள் உனது லீலைகள் அடங்கிய கதைகளை மட்டுமே கேட்க வேண்டும். இவற்றை நீ செய்வாயாக!