Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 26)

Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை

பவத்பக்தி: தாவத் ப்ரமுக மதுரா த்வத் குணரஸாத் கிமப்யாரூடா சேதகில பரிதாப ப்ரசமநீ புனச்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோதயமிலன் மஹாநந்தாத்வைதம் திசதி கிமத: ப்ரார்த்யமபரம் பவத் பக்தி: தாவத் ப்ரமுக மதுரா த்வத் குண ரஸாத் கிம் அபி ஆரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ புன: ச அந்தே ஸ்வ அந்தே விமல பரிபோத உதய மிலத் மஹா ஆநந்த அத்வைதம் திசதி கிம் அத: ப்ரார்த்யம் அபரம் भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वाद्गुणरसात् किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी । पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल - न्महानन्दाद्वैतं दिशति किमतः प्रार्थ्यमपरम्

குருவாயூரப்பா! உன்னிடம் கொள்ளும் பக்தியானது துவக்கம் முதலே இனிமையை அளிக்கிறது. அது மேலும் வளரும்போது அனைத்துத் துயர்களையும் நீக்குகிறது. அது மேலும் முதிர்ச்சி அடையும்போது இதயத்தில் மிகுந்த ஞானம் ஏற்படுத்தி, ப்ரஹ்ம ஐக்கியத்தையும் அளிக்கிறது. இதனை விட உயர்ந்தது உண்டோ?