Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 25)
Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை
பவத்பக்தி: ஸ்பீதா பவது மம ஸைவ ப்ரசமயேத் அசேஷ க்லேசௌகம் ந கலு ஹ்ருதி ஸந்தேஹ கணிகா ந சேத் வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச வசநம் நைகமவசோ பவேந்மித்யா ரத்யா புருஷ வசன ப்ராயமகிலம் பவத் பக்தி: ஸ்பீதா பவது மம ஸ ஏவ ப்ரசமயேத் அசேஷ க்லேச ஓகம் ந கலு ஹ்ருதி ஸந்தேஹ கணிகா ந சேத் வ்யாஸஸ்ய உக்தி: தவ ச வசநம் நைகம வச: பவேத் மித்யா ரத்யா புருஷ வசன ப்ராயம் அகிலம் भवद्भक्तिः स्फीता भवतु मम सैव प्रशमये - दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका । न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम्
குருவாயூரப்பா! உன்னிடம் நான் கொண்டுள்ள பக்தி என்பது முழுமையாக இருக்கவேண்டும். என்னுடைய சகலவிதமான துயரங்களையும் அந்த பக்தியே நீக்கி விடும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. அதனை விடுத்து அந்தப் பக்தியானது எனது துயரங்களை நீக்குமா என்று ஆராய்ந்தால் - வ்யாஸ பகவான் இயற்றிய பலவும், உனது வாக்கான ஸ்ரீமத்பகவத்கீதையும், வேதங்கள் கூறுவதும் தெருவில் போகும் வழிப்போக்கன் ஒருவன் கூறியது போல் அல்லவா ஆகிவிடும்?