Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 24)
Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை
முனி ப்ரௌடா ரூடா ஜகதி கலு கூடாத்மகதயோ பவத் பாதாம்போஜ ஸ்மரண விருஜோ நாரதமுகா: சரந்தீச ஸ்வைரம் ஸதத பரிநிர்ப்பாத பரசித் ஸதாநந்தாத்வைத ப்ரஸர பரிமக்னா: கிமபரம் முனி ப்ரௌடா ரூடா ஜகதி கலு கூடாத்மகதயோ பவத் பாத அம்போஜ ஸ்மரண விருஜோ நாரதமுகா: சரந்தி ஈச ஸ்வைரம் ஸதத பரிநிர்ப்பாத பரசித் ஸதாநந்த அத்வைத ப்ரஸர பரிமக்னா: கிம் அபரம் मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखाः । चरन्तीश ! स्वैरं सततपरिनिर्भातपरचित् - सदानन्दाद्वैतप्रसरपरिमग्नाः किमपरम् ?
ஈசனே! குருவாயூரப்பா! உலகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் முனிவர்கள் உனது தாமரை போன்ற திருவடிகளைத் த்யானித்த காரணத்தினால் அனைத்து துன்பங்களும் நீங்கப் பெற்றுள்ளனர். இதனால் தங்கள் விருப்பப்படி அத்வைத ஆனந்தத்தில் திளைத்து எங்கும் உலவி வருகின்றனர். இதற்கு மேல் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய பேறு என்ன இருக்கு முடியும்?