Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 23)
Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை
க்ருபா தே ஜாதா சேத் கிமிவ ந ஹி லப்யம் தநுப்ருதாம் மதீய க்லேசௌக ப்ரசமனதசா நாம கியதீ ந கே கே லோகேSஸ்மின் அநிசமயி சோகாபிரஹிதா பவத் பக்தா முக்தா: ஸுககதிமஸக்தா விதததே க்ருபா தே ஜாதா சேத் கிம் இவ ந ஹி லப்யம் தநுப்ருதாம் மதீய க்லேச ஔக ப்ரசமன தசா நாம கியதீ ந கே கே லோகே அஸ்மின் அநிசம் அயி சோக அபிரஹிதா பவத் பக்தா முக்தா: ஸுக கதிம் அஸக்தா விதததே कृपा ते जाता चेत् किमिव नहि लभ्यं तनुभृतां मदीयक्लेशौघ प्रशमनदशा नाम कियती ? । न के के लोकेऽस्मिन्ननिशमयि शोकाभिरहिता भवद्भक्ता मुक्ताः सुखगतिमसक्ता विदधते
குருவாயூரப்பா! உனது க்ருபை மனிதனிடம் இருக்கும் என்றால் அவனால் அடையமுடியாதது என்ன உள்ளது? இது போன்று என்னுடைய துன்பங்களை நீக்குவதும் உனக்கு மிகவும் சுலபமானதே! இந்த உலகில் உனது அடியார்கள் எந்த நேரத்திலும் துன்பம் என்பதே இல்லாமல் பற்று இல்லாதவர்களாக இன்பமாக உள்ளனரே!