Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 22)

Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை

கதக்லிஷ்டம் கஷ்டம் தவ சரண ஸேவா ரஸபரேSபி அநாஸக்தம் சித்தம் பவதி பத விஷ்ணோ குரு தயாம் பவத்பாதாம்போஜ ஸ்மரண ரஸிகோ நாம நிவஹான் அஹம் காயம் காயம் குஹசன விவத்ஸ்யாமி விஜனே கத க்லிஷ்டம் கஷ்டம் தவ சரண ஸேவா ரஸ பரே அபி அநாஸக்தம் சித்தம் பவதி பத விஷ்ணோ குரு தயாம் பவத் பாத அம்போஜ ஸ்மரண ரஸிகோ நாம நிவஹான் அஹம் காயம் காயம் குஹசன விவத்ஸ்யாமி விஜனே गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ - प्यनासक्तं चित्तं भवति बत विष्णो ! कुरु दयाम् । भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा - नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने

விஷ்ணுவே! குருவாயூரப்பா! வெளியிலும் உள்ளும் உண்டாகும் நோயினால் கஷ்டப்படும் மனமானது, உன்னுடைய திருவடியில் நான் ஈடுபட்டாலும் அதனைத் த்ருப்தியுடன் ஈடுபடவிடாது தடுக்கிறது. ஆகவே எனது பற்று குறைகிறது. இது கஷ்டம் அன்றோ! கருணை காட்டமாட்டாயா? தனியான ஓர் இடத்தில் உனது திருவடித் தாமரைகளைத் த்யானித்தும், அதனால் மனம் நெகிழ்ந்தும், உனது திருநாமங்களைக் கூறிக்கொண்டும் இருக்க விரும்புகிறேன்.