Sriman Narayaneeyam - Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை (ச்லோகம் 21)

Dasaka 3 - சிறந்த பக்தனின் நிலை

படந்தோ நாமானி ப்ரமத பரஸிந்தௌ நிபதிதா: ஸ்மரந்தோ ரூபம் தே வரத ! கதயந்தோ குணகதா: சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூன் அஹம் தந்யாந் மந்யே ஸமதிகத ஸர்வாபிலஷிதாந் படந்தோ நாமானி ப்ரமதபர ஸிந்தௌ நிபதிதா: ஸ்மரந்தோ ரூபம் தே வரத ! கதயந்தோ குணகதா: சரந்தோ யே பக்தா: த்வயி கலு ரமந்தே பரம் அமூன் அஹம் தந்யாந் மந்யே ஸமதிகத ஸர்வ அபிலஷிதாந் पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिताः स्मरन्तो रूपं ते वरद ! कथयन्तो गुणकथाः । चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू - नहं धन्यान्मन्ये समधिगतसर्वाभिलषितान्

வரங்களை அளிக்கும் குருவாயூரப்பா! உனது திருநாமங்களைப் படித்துக் கொண்டும், உன்னுடைய அழகான திருமேனியை த்யானித்துக்கொண்டும் அமிர்தம் என்னும் கடலில் மூழ்கியுள்ளவர் யார்? உனது அடியார்கள் ஆவர். உனது திருக்கல்யாண குணங்களையும், அவற்றை விளக்கும் கதைகளையும் அவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் உன்னிடம் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இத்தகைய உனது பக்தர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் என்று நான் கூறுகிறேன்.