Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 20)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
த்வத் பக்திஸ்து கதாரஸாம்ருதஜரீ நிர்மஜ்ஜனேன ஸ்வயம் ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீமக்லேசதஸ்தந்வதீ ஸத்யஸ்ஸித்திகரீ ஜயத்யயி விபோ ! ஸைவாஸ்து மே த்வத்பத ப்ரேம ப்ரௌடி ரஸார்த்ரதா த்ருத்தரம் வாதாலயாதீச்வர ! த்வத் பக்தி: து கதாரஸ அம்ருதஜரீ நிர்மஜ்ஜனேன ஸ்வயம் ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம் அக்லேசத: தன்வதீ ஸத்ய: ஸித்திகரீ ஜயதி அயி விபோ ! ஸா ஏவ அஸ்து மே த்வத் பத ப்ரேம ப்ரௌடி ரஸ ஆர்த்ரதா த்ருத்தரம் வாதாலயாதீச்வர ! त्वद्भक्तिस्तु कथारसामृतज्ञरीनिर्मज्जनेन स्वयं सिद्ध्यन्ती विमलप्रषोधपदवीमक्लेशतस्तन्वती । सद्यस्सिद्धिकरी जयत्ययि विभो ! सैवास्तु मे त्वत्पद - प्रेमप्रौढिरसार्द्रता द्रुततरं वातालयाधीश्वर !
ப்ரபுவான குருவாயூரப்பனே! உன்னிடம் உள்ள பக்தி என்பது உனது லீலைகள் நிரம்பிய கதைகளில் அல்லவா உள்ளது? அவை அமிர்தம் போன்று உள்ளன. அவை (கதைகள்) எந்தச் சிரமமும் இன்றி உனது மார்க்கத்தைக் காண்பிக்கின்றன. பிறவியின் பயனை உடனே அளிக்கின்றன. உன்னுடைய திருவடிகளில் நான் பொதிந்து கிடக்கும் அந்த பக்தியானது எனக்குச் சீக்கிரமாக உண்டாக வேண்டும்.***