Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 19)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
அத்யாயாஸகராணி கர்மபடலாந்யாசர்ய நிர்யந்மலா போதே பக்திபதேSதவாSப்யுசிததாமாயாந்தி கிம் தாவதா க்லிஷ்ட்வா தர்க்கபதே பரம் தவ வபுர்ப்ரஹ்மாக்யமந்யே புந: சித்தார்த்ரத்வம்ருதே விசிந்த்ய பஹுபிஸ்ஸித்யந்தி ஜந்மாந்தரை: அதி ஆயாஸ கராணி கர்மபடலாநி ஆசார்ய நிர்யந்மலா போதே பக்திபதே அதவா அபி அசிததாம் ஆயாந்தி கிம் தாவதா க்லிஷ்ட்வா தர்க்கபதே பரம் தவ வபு: ப்ரஹ்ம ஆக்யம் அந்யே புந: சித் ஆர்த்ரத்வம் ருதே விசிந்த்ய பஹுபி: ஸித்யந்தி ஜந்மாந்தரை: अत्यायासकराणि कर्मपटलान्याचर्य निर्यन्मला बोधे भक्तिपथेऽथवाप्युचिततामायान्ति किं तावता ? । क्लिष्ट्वा तर्कपथे परं तव वपुर्ब्रह्माख्यमन्ये पुन - श्चित्तार्द्रत्वमृते विचिन्त्य बहुभिः सिध्यन्ति जन्मान्तरैः
குருவாயூரப்பா! மன இருளை நீக்கி, இதனால் ஞானயோகத்திற்கும் பக்தி யோகத்திற்கும் தங்களைக் தகுதி உடையவர்களாக சிலர் செய்து கொள்கின்றனர். இதனால் என்ன பயன்? உனது அழகால் உள்ளத்தில் நெகிழ்வு உண்டாகாமல், வேதாந்தம் தர்க்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, ப்ரஹ்மம் என்று உன்னைத் த்யானித்து, பல பிறவிகள் கடந்து உன்னை அடைகின்றனர்.