Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 18)

Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு

நிஷ்காமம் நியதஸ்வதர்ம சரணம் யத் கர்மயோகாபிதம் தத்தூரேத்ய பலம் யதௌபநிஷத ஜ்ஞானோபலப்யம் புன: தத்த்வ்யக்ததயா ஸுதுர்கமதரம் சித்தஸ்ய தஸ்மாத் விபோ த்வத் ப்ரேமாத்மக பக்திரேவ ஸததம் ஸ்வாதீயஸீ ச்ரேயஸீ நிஷ்காமம் நியத ஸ்வதர்ம சரணம் யத் கர்மயோக அபிதம் தத் தூரேத்ய பலம் யத் உபநிஷத ஜ்ஞாந உபலப்யம் புந: தத் து அவ்யக்ததயா ஸுதுர்கமதரம் சித்தஸ்ய தஸ்மாத் விபோ த்வத் ப்ரேமாத்மக பக்தி: ஏவ ஸததம் ஸ்வாதீயஸீ ச்ரேயஸீ निष्कामं नियतस्वधर्मचरणं यत् कर्मयोगाभिधं तद्दूरेत्यफलं यदौपनिषदज्ञानोपलभ्यं पुनः । तत्त्वव्यक्ततया सुदुर्गमतरं चित्तस्य तस्माद्विभो त्वत्प्रेमात्मकभक्तिरेव सततं स्वदीयसी श्रेयसी

எங்கும் நிறைந்துள்ள குருவாயூரப்பா! எந்தவிதமான பலனையும் விரும்பாமல், தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வது கர்மயோகம் ஆகும்; இது பலநாள் கழித்தே பலன் அளிக்கும். உபநிஷத்துக்களை நன்கு கற்பதன் மூலம் ஞானயோகம் கைகூடும். ஞானயோகத்தின் பலன்களை இந்த்ரியங்களால் அனுபவிக்கவோ உணரவோ இயலாது, ஆகக் கடினமானது. எனவே இந்த இரண்டை விட, உன் மீது வைக்கும் பக்தி மூலம் கிட்டும் பக்தியோகமே இனிமையானதும் சிறப்பானதும் ஆகும்.