Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 17)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ யோகஸ்ஸ யோகத்வயாத் கர்மஜ்ஞானமயாத் ப்ருசோத்தமதரோ யோகீச்வரைர் கீயதே ஸௌந்தர்யைக ரஸாத்மகே த்வயி கலு ப்ரேம ப்ரகர்ஷாத்மிகா பக்திர் நிச்ரமமேவ விச்வ புருஷைர் லப்யா ரமாவல்லப ஏவம் பூததயா ஹி பக்தி அபிஹித: யோக: ஸ யோகத்வயாத் கர்ம ஜ்ஞாநமயாத் ப்ருசோத்தமதரோ யோகீச்வரை: கீயதே ஸௌந்தர்யைக ரஸ ஆத்மகே த்வயி கலு ப்ரேம ப்ரகர்ஷ ஆத்மிகா பக்தி: நிச்ரமம் ஏவ விச்வ புருஷை: லப்யா ரமாவல்லப एवंभूततया हि भक्त्यभिहितो योगः स योगद्वयत् कर्मज्ञानमयाद्भृशोत्तमतरो योगीश्वरैर्गीयते । सौन्दर्यैकरसात्मके त्वयि खलु प्रेमप्रकर्षात्मिका भक्तिर्निश्रममेव विश्वपुरुषैर्लभ्या रमावल्लभ
மஹாலக்ஷ்மியின் நாயகனே! குருவாயூரப்பா! மேலே உள்ள ச்லோகத்தின் நிலை நமக்கு உண்டாவதால்தான் பக்தி யோகமே சிறப்பானது என்று கூறப்பட்டது. இது கர்மயோகம், ஞானயோகம் ஆகியவற்றை விட உயர்ந்தது என்று யோகிகள் கூறுகின்றனர். அழகின் இருப்பிடமாகவே உள்ள உன்னிடம் காதலின் விளைவால் உண்டாகும் பக்தியோகம் மனிதர்களுக்கு எளிதில் கைகூடும் அல்லவா?