Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 16)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
ஏவம்பூத மநோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹனம் த்வத்ரூபம் பரசித் ரஸாயனமயம் சேதோஹரம் ச்ருண்வதாம் ஸத்ய: ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞ்சயத்யங்ககம் வ்யாஸிஞ்சத்யபி சீதபாஷ்ப விஸரைரானந்த மூர்ச்சோத்பவை: ஏவம் பூத மநோஜ்ஞதா நவ ஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம் த்வத் ரூபம் பர சித் ரஸாயநமயம் சேதோஹரம் ச்ருண்வதாம் ஸத்ய: ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞ்சயதி அங்ககம் வ்யாஸிஞ்சதி அபி சீதபாஷ்ப விஸரை: ஆநந்த மூர்ச்சா உத்பவை: एवंभूतमनोज्ञतानवसुधानिष्यन्दसन्दोहनं त्वद्रूपं परचिद्रसायनमयं चेतोहरं श्रृण्वताम् । सद्यः प्रेरयते मतिं मदयते रोमाञ्चयत्यङ्गकं व्यासिञ्चत्यपि शीतबाष्पविसरैरानन्दमूर्च्छोद्भवैः
குருவாயூரப்பா! கடந்த ச்லோகத்தில் கூறியது போன்றுள்ள உனது அழகானது அமிர்தத்தை வழங்குவதாகவும், ஆனந்த வடிவமாகவும், பார்ப்பவர்கள் உள்ளத்தைக் கவருவதாகவும் இருக்கிறது. உனது திருமேனி அழகை ஒருமுறை யாராவது கூறக்கேட்டால் அதனைத் திரும்பத் திரும்பக் கேட்க மனம் துள்ளுகிறது. அப்படிக் கேட்டவுடன் மனதைப் பரவசம் நிரப்புகிறது. உடல் எங்கும் மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனந்தக் கண்ணீர் பெருகி உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது.