Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 15)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
லக்ஷ்மீஸ்தாவக ராமணீயக ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்த்திரேதி அஸ்மிந் அந்யத் அபி ப்ரமாணமதுநா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே யே த்வத் த்யான குணாநு கீர்த்தன ரஸாஸக்தா ஹி பக்தா ஜநா: தேஷ்வேஷா வஸதி ஸ்திரைவ தயித ப்ரஸ்தாவ தத்தாதரா லக்ஷ்மீ: தாவக ராமணீயகஹ்ருதா ஏவ இயம் பரேஷு அவஸ்திர இதி அஸ்மிந் அந்யத் அபி ப்ரமாணம் அதுநா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே யே த்வத் த்யான குண அநுகீர்த்தன ரஸ ஆஸக்தா ஹி பக்தா ஜநா: தேஷு ஏஷா வஸதி ஸ்திரைவ தயித ப்ரஸ்தாவ தத்த ஆதரா लक्ष्मीस्तावकरामणीयकहृतैवेयं परेष्वस्थिरे - त्यस्मिन्नन्यदपि प्रमाणमधुना वक्ष्यामि लक्ष्मीपते । ये त्वद्ध्यानगुणानुकीर्तनरसासक्ता हि भक्ता जना - स्तेष्वेषा वसति स्थिरैव दयितप्रस्तावदत्तादरा
குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாயகனே! பதியே! உன்னுடைய திருமேனி அழகில் மிகவும் கவரப்பட்டு உன்னுடன் இருக்கும் மஹாலக்ஷ்மி, பிறரிடம் இருப்பதில்லை என்பதற்கு இன்னும் ஓர் ஆதாரமும் உள்ளது. உன்னைப் பற்றியும் உனது திருக்கல்யாண குணங்களைக் குறித்தும் நாம ஸங்கீர்த்தனம் செய்யும் உனது அடியார்களைக் கண்டு, “இவர்கள் எனது கணவரைப் பற்றி அன்றோ கூறுகிறார்கள்”, என்று மகிழ்ந்து அவர்களிடமும் வாசம் செய்கிறாள் அன்றோ! இதன் மூலம் உன்னைப் பற்றிக் கூறாதவர்களிடம் மட்டுமே இவள் நிலையாக இருப்பதில்லை என்று உணரலாம்.