Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 14)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
தத்தாத்ருங்மதுராத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ ஸா தேவீ பரமோத்ஸுகா சிரதரம் நாஸ்தே ஸ்வபக்தேஷ்வபி தேநாஸ்யா பத கஷ்டமச்யுத ! விபோ ! த்வத்ரூப மனோஜ்ஞக ப்ரேமஸ்தைர்யமயாதசாபல பலாச்சாபல்ய வார்த்தோதபூத் தத் தாத்ருக் மதுர ஆத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ ஸா தேவீ பரம உத்ஸுகா சிரதரம் ந ஆஸ்தே ஸ்வ பக்தேஷு அபி தேந அஸ்யா பத கஷ்டம் அச்யுத ! விபோ ! த்வத் ரூப மனோஜ்ஞக ப்ரேம ஸ்தைர்யமயாத் அசாபல பலாத் சாபல்ய வார்த்தா உதபூத் तत्तादृङ्मधुरात्मकं तव वपुस्संप्राप्य संपन्मयी सा देवी परमोत्सुका चिरतरं नाऽस्ते स्वभक्तेष्वपि । तेनास्या बत कष्टमच्युत विभो ! त्वद्रूपमानोज्ञक - प्रेमस्थैर्यमयादचापलबलाच्चापल्यवार्तोदभूत्
எங்கும் உள்ளவனே! உனது அடியார்களை கைவிடாத அச்சுதனே! குருவாயூரப்பா! அனைத்து ஐச்வர்யங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவள் மஹாலக்ஷ்மீ ஆவாள். அவள், ஒப்பு இல்லாத உயர்ந்த உனது திருமேனியை அடைந்து, அதனால் மிகவும் மனமகிழ்வு அடைந்து, அங்கேயே தங்கிவிட்டாள். இதனால் அவள் தன்னுடைய அடியார்களிடம் கூடத் தங்கியிருப்பதில்லை. இதன் விளைவாக அவளுக்கு, “சபலம் உடையவள், நிலை அற்றவள்” என்ற அவப்பெயர் அல்லவா உண்டானது?