Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 13)

Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு

யத் த்ரைலோக்ய மஹீயஸோSபி மஹிதம் ஸம்மோஹனம் மோஹநாத் காந்தம் காந்தி நிதாநதோSபி மதுரம் மாதுர்ய துர்யாதபி ஸௌந்தர்யோத்தரதோSபி ஸுந்தரதரம் த்வத் ரூபம் ஆச்சர்யதோSபி ஆச்சர்யம் புவநே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ யத் த்ரைலோக்ய மஹீயஸ: அபி மஹிதம் ஸம்மோஹனம் மோஹநாத் காந்தம் காந்தி நிதாநத: அபி மதுரம் மாதுர்ய துர்யாத் அபி ஸௌந்தர்ய உத்தரத: அபி ஸுந்தரதரம் த்வத் ரூபம் ஆச்சர்யத: அபி ஆச்சர்யம் புவநே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ यत्त्रैलोक्यमहीयसोऽपि महितं सम्मोहनं मोहनात् कान्तं कान्तिनिधानतोऽपि मधुरं माधुर्यधुर्यादपि । सौन्दर्योत्तरतोऽपि सुन्दरतरं त्वद्रूपमाश्चर्यतोऽप्याश्चर्यं भुवने न कस्य कुतुकं पुष्णाति विष्णो ! विभो !

அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளவனே (விபோ)! விஷ்ணுவே! குருவாயூரப்பா! உனது உருவம் எப்படிப்பட்டது? மூன்று உலகங்களில் பெருமையும் சிறந்தும் உடைய பொருள் எது இருந்தாலும் அதனை விடச் சிறந்ததாக உள்ளது; எந்தப் பொருள் அனைவரது மனதையும் கவருமோ அந்தப் பொருளை விட உனது திருமேனி கவரக்கூடியது; எந்தப் பொருள் கவர்ச்சியும் ஒளியும் கொண்டதோ அதனை விடக் கவர்ச்சியும் ஒளியும் உடையது; எது மிகவும் இனிமையாக உள்ளதோ அதனை விட இனிமையானது; எது அழகாக உள்ளதோ அதனைவிட அழகு நிறைந்ததாக உள்ளது; எது வியப்பை அளிக்கிறதோ அதனை விட வியப்பை அளிப்பதாக உள்ளது. இத்தனை சிறப்புடைய உனது திருமேனி யாருக்குத்தான் மன மகிழ்வை அளிக்காது?