Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 12)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
கேயூராங்கத கங்கணோத்தம மஹாரத்நாங்குலீயாங்கித ஸ்ரீமத்பாஹு சதுஷ்க ஸங்க கதா சங்காரி பங்கேருஹாம் காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித லஸத் பீதாம்பராலம்பினீம் ஆலம்பே விமலாம்புஜ த்யுதிபதாம் மூர்த்திம் தவார்த்திச்சிதம் கேயூராங்கத கங்கணோத்தம மஹாரத்ந அங்குலீய அங்கித ஸ்ரீமத்பாஹு சதுஷ்க ஸங்க கதா சங்க அரி பங்கேருஹாம் காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித லஸத் பீதாம்பர ஆலம்பினீம் ஆலம்பே விமல அம்புஜ த்யுதி பதாம் மூர்த்திம் தவ ஆர்த்திச்சிதம் केयूराङ्गदकङ्कणोत्तममहारत्नाङ्गुलीयाङ्कित - श्रीमद्बाहुचतुष्कसङ्गतगदाशङ्खारिपङ्केरुहाम् । काञ्चित् काञ्चिनकाञ्चिलाञ्च्छितलसत्पीताम्बरालम्बिनी - मालम्बे विमलाम्बुजद्युतिपदां मूर्तिं तवार्तिच्छिदम्
குருவாயூரப்பா! உன்னுடைய நான்கு திருக்கரங்களில் வளையல்கள், அங்கத ஆபரணம், கங்கணம், இரத்தினம் உள்ள மோதிரங்கள் உள்ளன. அந்தத் திருக்கரங்கள் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர் ஆகியவற்றை ஏந்தி உள்ளன. உனது இடுப்பில் அரைஞாண் கயிறும், பட்டு ஆடையான பீதாம்பரமும் உள்ளன. உனது திருவடிகள் தாமரை மலர் போன்று அழகாக சிவந்து தூய்மையாக உள்ளன. உனது இத்தகைய அழகான திருமேனியைக் கண்டவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. இதனை நான் சரணம் என்று அடைகிறேன்.