Sriman Narayaneeyam - Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு (ச்லோகம் 11)
Dasaka 2 - ஸ்ரீகுருவாயூரப்பனின் அழகு
ஸூர்ய ஸ்பர்த்தி கிரீடமூர்த்வ திலக ப்ரோத்பாஸி பாலாந்தரம் காருண்யாகுலநேத்ரமார்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம் கண்டோத்யன் மகராப குண்டலயுகம் கண்டோஜ்வலத் கௌஸ்துபம் த்வத்ரூபம் வநமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸதீப்ரம் பஜே ஸூர்ய ஸ்பர்த்தி கிரீடம் ஊர்த்வ திலக ப்ரோத்பாஸி பாலாந்தரம் காருண்ய ஆகுலநேத்ரம் ஆர்த்ர ஹஸித உல்லாஸம் ஸுநாஸாபுடம் கண்டோத்யன் மகர ஆப குண்டல யுகம் கண்டோஜ்வலத் கௌஸ்துபம் த்வத் ரூபம் வநமால்ய ஹார படல ஸ்ரீவத்ஸதீப்ரம் பஜே सूर्यस्पर्धिकिरीटमूर्ध्वतिलकप्रोद्भासिफालान्तरं कारुण्याकुलनेत्रमार्द्रहसितोल्लासं सुनासापुटम् । गण्डोद्यन्मकराभकुण्डलयुगं कण्ठोज्ज्वलत्कौस्तुभं त्वद्रूपं वनमाल्यहारपटलश्रीवत्सदीप्रं भजे
குருவாயூரப்பா! உன்னுடைய க்ரீடமானது சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளியுடையதாக உள்ளது. அழகாக நெற்றியில் இடப்பட்டுள்ள திலகத்தால் உனது நெற்றி ஒளி வீசுகிறது. திருக்கண்களில் கருணை ததும்பி உள்ளது. அந்தக் திருக்கண்கள் புன்னகையை வீசிச் சிரிக்கின்றன; திருமூக்கானது மிகவும் எடுப்பாக உள்ளது; திருச்செவிகளில் அணிந்துள்ள குண்டலங்கள், மீன் போன்று வந்து வந்து உனது கன்னங்களில் இடித்து நிற்கின்றன; திருக்கழுத்தில் கௌஸ்துபம் என்ற மணி ஒளி வீசுகிறது; திருமார்பில் வைஜயந்தி என்ற மாலையும், முத்து மாலையும் உள்ளன; மேலும் ஸ்ரீவத்ஸம் கொண்டதுமாக உனது திருமார்பு உள்ளது. இத்தனை அழகான உனது திருவுருவத்தை நான் த்யானம் செய்கிறேன்.