Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 10)

Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை

ஐச்வர்யம் சங்கராதீச்வர விநியமனம் விச்வ தேஜோஹராணாம் தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யசோ நிஸ்ப்ருஹைச்சோபகீதம் அங்காஸங்கா ஸதா ஸ்ரீரகிலவிதஸி ந க்வாபி தே ஸங்கவார்த்தா தத்வாதாகாரவாஸிந் ! முரஹர ! பகவச் சப்த முக்யாச்ரயோSஸி ஐச்வர்யம் சங்கராதீ ஈச்வர விநியமனம் விச்வ தேஜோஹராணாம் தேஜ: ஸம்ஹாரி வீர்யம் விமலம் அபி யச: நிஸ்ப்ருஹை: ச உபகீதம் அங்காஸங்கா ஸதா ஸ்ரீ: அகில விதஸி ந க்வாபி தே ஸங்கவார்த்தா தத் வாதாகாரவாஸிந் ! முரஹர ! பகவத் சப்த முக்ய ஆச்ரய: அஸி ऐश्वर्यं शङ्करादीश्वरविनियमनं विश्वतेजोहराणां तेजस्संहारि वीर्यं विमलमपि यशो निस्पृहैश्चोपगीतम् । अङ्गासङ्गा सदा श्रीरखिलविदसि न क्वापि ते सङ्गवार्ता तद्वातागारवासिन् ! मुरहर ! भगवच्छब्दमुख्याश्रयोऽसि

முரன் என்ற அசுரனைக் அழித்தவனே! ஸ்ரீஹரியே! குருவாயூரில் எப்போதும் வசிப்பவனே! உன்னுடைய செல்வம் எது? சங்கரன் போன்றவர்களை அவர்களுடைய கடமைகளில் அவர்களை ஈடுபட வைப்பது அன்றோ! அனைவரின் சக்தியையும் அபகரிக்கும் திறன் உடைய சங்கரனின் சக்தியையும் அபகரிக்கும் திறன் உடையவன் நீயே ஆவாய். உன்னுடைய புகழை முற்றும் துறந்த முனிவர்கள் எப்போதும் பாடுகின்றனர். உன்னுடைய திருமேனியில் மஹாலக்ஷ்மி எப்போதும் வசித்து வருகிறாள். நீ அனைத்தையும் அறிந்தவன் ஆவாய். எதிலும் பற்று இல்லாமல் உள்ளாய். பகவான் என்ற பதத்திற்கு இலக்கணமாக உள்ளாய் (பகவான் என்ற பதம் ஆறு குணங்களைக் குறிக்கும் - ஐச்வர்யம், புகழ், தேஜஸ், செல்வம், ஞானம் மற்றும் வைராக்யம்).***