Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 9)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
காருண்யாத் காமமந்யம் தததி கலு பரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத் ஐச்வர்யாதீசதேSந்யே ஜகதி பரஜநே ஸ்வாத்மநோSபீச்வரஸ்த்வம் த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத மதுரே சேதநா: ஸ்பீதபாக்யா: த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகுணகணாதார ! சௌரே ! நமஸ்தே காருண்யாத் காமம் அந்யம் தததி கலு பரே ஸ்வ ஆத்மத: த்வம் விசேஷாத் ஐச்வர்யாத் ஈசதே அந்யே ஜகதி பரஜநே ஸ்வ ஆத்மந: அபி ஈச்வர: த்வம் த்வயி உச்சை: ஆரமந்தி ப்ரதிபத மதுரே சேதநா: ஸ்பீதபாக்யா: த்வம் ச ஆத்மாராம: ஏவ இதி அதுலகுணகணாதார ! சௌரே ! நமஸ்தே कारुण्यात् काममन्यं ददति खलु परे ! स्वात्मदस्त्वं विशेषा - दैश्वर्यादीशतेऽन्ये जगति परजने स्वात्मनोऽपीश्वरस्त्वम् । त्वय्युच्चैरारमन्ति प्रतिपदमधुरे चेतनाः स्फीतभाग्यास्त्वं चात्माराम् एवेत्यतुलगुणगणाधार ! शौरे ! नमस्ते
இனிமையான திருக்கல்யாண குணங்கள் உடைய குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள பல தெய்வங்கள், தன்னை வணங்குபவர்களுக்கு தங்களை அல்லாமல் மற்றவற்றை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் நீயோ, உன்னை வணங்குபவர்களுக்கு உனது ஆத்மாவையே (உன்னையே) கொடுக்கின்றாய். மற்ற தெய்வங்கள், ஐச்வர்யத்தின் மூலமும் அணிமா போன்ற சக்திகளின் மூலமாகவும் தங்களது ஈச்வரத் தன்மையை விளக்குகின்றன. ஆனால் நீயோ, ஆத்மாவையே வென்று அதனை நிரூபிக்கிறாய். புண்ணியம் செய்தவர்கள் உன்னையே அடைந்து உயர்ந்த ஆனந்தம் அடைகின்றனர். யாரிடமும் எதனையும் எதிர்பாராமல் உள்ளவனே! ஆனந்த ரூபனே! உனக்கு நமஸ்காரம்.