Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 8)

Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை

நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தைரநப்யர்த்திதாநபி அர்த்தாந் காமாநஜஸ்ரம் விதரதி பரமானந்த ஸாந்த்ராம் கதிம் ச இத்தம் நிச்சேஷலப்யோ நிரவதிகபல: பாரிஜாதோ ஹரே ! த்வம் க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமமபிலஷதி வ்யர்த்தமர்த்திவ்ரஜோSயம் நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததம் அபி புர: தை: அநப்யர்த்திதாந் அபி அர்த்தாந் காமாந் அஜஸ்ரம் விதரதி பரமானந்த ஸாந்த்ராம் கதிம் ச இத்தம் நிச்சேஷலப்ய: நிரவதிகபல: பாரிஜாத: ஹரே ! த்வம் க்ஷுத்ரம் தம் சக்ரவாடீத்ருமம் அபிலஷதி வ்யர்த்தம் அர்த்திவ்ரஜ: அயம் नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान - प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च । इत्थं निश्शेषलभ्यो निरवधिकफलः पारिजातो हरे त्वं क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्

குருவாயூரப்பா! நீ எளிதாக அடையக்கூடியவனாகவும், கேட்ட பலன்களை உடனே அளிப்பவனாகவும், பாரிஜாத மரம் போன்றும் உள்ளாய். உன்னை வழிபடுவோர்களுக்கு அனைத்தையும் நிரம்ப வழங்குகின்றாய். என்ன கேட்பது என்று அறியாதவர்கள் மனதில் உள்ள விருப்பத்தைப் புரிந்தும் அளிப்பவன் நீயே ஆவாய். அவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிப்பவனும் மோக்ஷம் அளிப்பவனும் நீயே ஆவாய். இப்படியாக நீ எளிதாக அடைய உள்ளவனாக இருந்தாலும், மனிதர்கள் தேவலோகத்தில் உள்ள கற்பகமரம் போன்ற அற்ப விஷயங்களையே விரும்புகின்றனரே!