Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 7)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா பஹுதரபவ கேதாவஹா ஜீவபாஜாம் இத்யேவம் பூர்வமாலோசிதமஜித ! மயா நைவமத்யாபிஜாநே நோசேஜ்ஜீவா: கதம் வா மதுரதரமிதம் த்வத் வபுச்சித்ர ஸார்த்ரம் நேத்ரை: ச்ரோத்ரைச்ச பீத்வா பரம ரஸ ஸுதாம்போதிபூரே ரமேரந் கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா பஹுதர பவ கேத ஆவஹா ஜீவபாஜாம் இதி ஏவம் பூர்வம் ஆலோசிதம் அஜித ! மயா ந ஏவம் அத்ய அபிஜாநே நோ சேத் ஜீவா: கதம் வா மதுரதரம் இதம் த்வத் வபு: சித்ர ஸார்த்ரம் நேத்ரை: ச்ரோத்ரை: ச பீத்வா பரம ரஸ ஸுதாம் அபோதிபூரே ரமேரந் कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा - मित्येवं पूर्वमालोचितमजित ! मया नैवमद्याभिजाने । नो चेज्जीवाः कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं नेत्रैः श्रोत्रैश्च पीत्वा परमरससुधांभोधिपूरे रमेरन्
யாராலும் வெல்ல முடியாத குருவாயூரப்பா! “நீ ஸ்ருஷ்டிப்பதால் மனிதர்கள் இந்த உலகில் பிறக்கின்றனர். அப்படிப் பிறந்த பின்னர், அவர்கள் பலவகையான துயரங்களை அனுபவிக்கின்றனர். ஆக உன்னுடைய ஸ்ருஷ்டி என்பது மனிதர்களுக்குத் துன்பம் அளிக்கவே உள்ளது”, என்று ஒரு காலத்தில் நான் எண்ணியது உண்டு. உன்னைக் கண்ட பின்னர் என்னுடைய இந்த எண்ணம் தவறானது என்று நான் அறிந்தேன்! நீ அப்படி எங்களை ஸ்ருஷ்டிக்கவில்லை என்றால், பரமானந்தம் அளிக்கும் உனது இந்தத் திருமேனியை எங்களால் எப்படிக் காண இயலும்? காதுகளால் உனது பெருமைகளை எப்படிக் கேட்க இயலும்? எப்படி ஆனந்தக்கடலில் மூழ்கவும் முடியும்?