Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 6)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
தத்தே ப்ரத்யக்ர தாரா தர லலித கலாயாவலீ கேலிகாரம் லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதி ஜந த்ருசாம் பூர்ண புண்யாவதாரம் லக்ஷ்மீ நிச்சங்க லீலா நிலயநமம்ருத ஸ்யந்த ஸந்தோஹமந்த: ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகாரநாத ! தத் தே ப்ரத்யக்ர தாரா தர லலித கலாய அவலீ கேலிகாரம் லாவண்யஸ்ய ஏகஸாரம் ஸுக்ருதி ஜந த்ருசாம் பூர்ண புண்ய அவதாரம் லக்ஷ்மீ நிச்சங்க லீலா நிலயநம் அம்ருத ஸ்யந்த ஸந்தோஹம் அந்த: ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபு: அநுகலயே மாருதாகாரநாத ! तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम् । लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्तः सिञ्चत्संचिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ !
குருவாயூரப்பா! உன்னுடைய திருமேனியானது எப்படி உள்ளது? நீர் கொண்ட மேகம் போன்று கறுத்தும் அழகாகவும்; காயம்பூ போன்று மனதிற்கு இன்பம் அளிப்பதாகவும்; எல்லையற்ற அழகிற்கு இருப்பிடமாகவும்; புண்ணியம் செய்த மனிதர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் விளைவாகவும்; மஹாலக்ஷ்மீ மிகவும் விரும்பி விளையாடும் இடமாகவும்; த்யானம் செய்பவர்களின் மனதில் அமிர்தம் போன்ற இனிமை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதனை, இந்தத் திருமேனியை நான் எப்போதும் த்யானிக்கிறேன்.