Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 5)

Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை

நிர்வ்யாபாரோSபி நிஷ்காரணமஜ! பஜஸே யத் க்ரியாமீக்ஷணாக்யாம் தேநைவோதேதி லீநா ப்ரக்ருதி ரஸதி கல்பாSபி கல்பாதி காலே தஸ்யா:ஸம்சுத்தமம்சம் கமபி தமதிரோதாயகம் ஸத்வரூபம் ஸ த்வம் த்ருத்வா ததாஸி ஸ்வமஹிம விபவாகுண்ட வைகுண்ட! ரூபம் நிர்வ்யாபார: அபி நிஷ்காரணம் அஜ! பஜஸே யத் க்ரியாம் ஈக்ஷணா ஆக்யாம் தேந ஏவ உதேதி லீநா ப்ரக்ருதி: ரஸதி கல்பா அபி கல்பாதி காலே தஸ்யா:ஸம்சுத்தம் அம்சம் கமபி தம் அதிரோதாயகம் ஸத்வரூபம் ஸ த்வம் த்ருத்வா ததாஸி ஸ்வமஹிம விபவ அகுண்ட வைகுண்ட! ரூபம் निर्व्यापारोऽपि निष्कारणमज ! भजसे यत्क्रियामीक्षणाख्यां तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पाऽऽदिकाले । तस्यास्संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ ! वैकुण्ट ! रूपम्

தோற்றம் என்பதே இல்லாமல் (அதாவது பிறப்பில்லாமல்), எப்போதும் உள்ள குருவாயூரப்பா! நீ செய்யவேண்டும் என்று எந்தச் செயலும் இல்லை (அனைத்திற்கும் உன்னால் ஏவப்பட்டவர்கள் உள்ளனர்). இருந்தாலும் நீ ஸங்கல்பத்திலிருந்தே (சிந்தனை அல்லது எண்ணம்) ப்ரக்ருதி உண்டானது. அது ஸ்ருஷ்டிக்கு முன்னர் உன்னிடம் மறைந்து இருந்தது. கல்பம் தொடங்கியபோது அது உன்னிடம் இருந்து தோன்றியது. உனது மகிமையால் எந்தத் தடையும் இல்லாத சக்தியை உடையவனே! ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளவனே! உனது சக்தியின் மூலம் மாயையான ப்ரக்ருதியின் ஸத்வ அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நீ இந்த ஒப்பற்ற உருவம் கொண்டுள்ளாய்.