Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 4)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமானந்த பீயூஷ ரூபே நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்ம ஸிந்தௌ கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹுஸ்ததாத்மா கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந்! நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமானந்த பீயூஷ ரூபே நிர்லீந அநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்ம ஸிந்தௌ கல்லோல உல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வம் ஆஹு: தத் ஆத்மா கஸ்மாத் ந நிஷ்கல: த்வம் ஸகல இதி வச: த்வத் கலாஸு ஏவ பூமந்! निष्कम्पे नित्यपूर्णे निरवधि परमानन्दपीयूषरूपे निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ । कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन्
குருவாயூரப்பா! நீ மாறுதல்கள் அடையாமலும், எப்போதும் முழுமை பெற்றவனாகவும், ஆனந்தம் அளிக்கும் அமிர்தம் போன்றும் உள்ளாய். இத்தகைய அமிர்தம் நிறைந்த ஸமுத்ரத்தில் உனது அடியார்கள் முத்துக்கள் போன்று உள்ளனர் (அதாவது முக்தி அடைந்தவர்கள்). இத்தகைய ப்ரஹ்மமாகிய ஸமுத்ரத்தில் வீசும் அலைகள் உனது ஸத்வகுணம் ஆகும். பரிபூரணமாக உள்ளவனே (பூமன்)! நீ நிஷ்கலன் (முழுமையானவன், பிரிக்கவே இயலாதவன்) என்பது உண்மையே! உன்னை ஸகலன் என்று கூறுவது நீ எடுத்த அவதாரங்கள் மூலமே பொருந்தும்.