Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 3)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
ஸத்த்வம் யத்தத் பராப்யாமபரிகலனதோ நிர்மலம் தேந தாவத் பூதைர் பூதேந்த்ரியைஸ்தே வபுரிதி பஹுச: ச்ரூயதே வ்யாஸ வாக்யம் தத் ஸ்வச்சத்வாத்யதாச்சாதித பரஸுகசித் கர்ப்ப நிர்ப்பாஸ ரூபம் தஸ்மிந் தந்யா ரமந்தே ச்ருதி மதி மதுரே ஸுக்ரஹே விக்ரஹே தே ஸத்த்வம் யத் தத் பராப்யாம் அபரிகலனத: நிர்மலம் தேந தாவத் பூதை: பூதேந்த்ரியை: தே வபு: இதி பஹுச: ச்ரூயதே வ்யாஸ வாக்யம் தத் ஸ்வச்சத்வாத் ஆச்சாதித பரஸுகசித் கர்ப்ப நிர்ப்பாஸ ரூபம் தஸ்மிந் தந்யா ரமந்தே ச்ருதி மதி மதுரே ஸுக்ரஹே விக்ரஹே தே सत्त्वं यत्तत्पुराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत् भूतैर्भूतेनिद्रयैस्ते वपुरिति बहुशः श्रूयते व्यासवाक्यम् । तत्स्वच्छत्वाद्यदच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते
குருவாயூரப்பா! ரஜோ மற்றும் தமஸ் குணங்கள் கலவாமல், ஸத்வகுணம் மட்டுமே உள்ளதால், தோஷம் ஏதும் இன்றி விளங்கக்கூடிய ஸூக்ஷ்மமான பஞ்சபூதங்களாலும் இந்த்ரியங்களாலும் உனது திருமேனி ஆக்கப்பட்டது என்றே வேதவ்யாஸர் கூறுகிறார். இப்படியாக உனது திருமேனி உள்ளதால், அதற்குள் அடங்கிய ப்ரகாசமும், ஞானமும், ஆனந்தமும் மறையாமல் உள்ளது. இத்தகைய உனது அர்ச்சாவதார விக்ரஹத்தைக் கண்டும், அதனைப் பற்றிக் கேட்டும், அதனை த்யானித்தும் உனது அடியார்கள் மிகுந்த ஆனந்தம் பெறுகின்றனர்.