Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 2)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
ஏவம் துர்லப்ய வஸ்துந்யபி ஸுலபதயா ஹஸ்த லப்தே யதன்யத் தந்வா வாசா தியா வா பஜதி பத ஜந: க்ஷுத்ரதைவ ஸ்புடேயம் ஏதே தாவத் வயம் து ஸ்திரதர மநஸா விச்வபீடாப ஹத்யை நிச்சேஷாத்மாநமேனம் குருபவந புராதீசமேவாச்ரயாம: ஏவம் துர்லப்ய வஸ்துநி அபி ஸுலபதயா ஹஸ்த லப்தே யதன்யத் தந்வா வாசா தியா வா பஜதி பத ஜந: க்ஷுத்ரதா ஏவ ஸ்புட இயம் ஏதே தாவத் வயம் து ஸ்திரதர மநஸா விச்வ பீடாப ஹத்யை நிச்சேஷ ஆத்மாநம் ஏநம் குருபவந புராதீசம் ஏவ ஆச்ரயாம: एवं दुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत् तन्वा वाचा धिया वा भजति बत जनः क्षुद्रतैव स्फुटेयम् । एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीडापहत्यै निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयामः
இப்படியாக, கிடைப்பதற்கு மிகவும் அரிய ஒரு வஸ்து நமக்கு எளிதாகக் கிடைக்கும்படி நிற்கிறது. நம்முடைய கைகளுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. இதனை உணராமல் மனிதர்கள் தங்கள் உடலாலும் மனதாலும், வாக்காலும் மற்ற தெய்வங்களை நாடுகின்றனர். இது அவர்கள் அறியாமையே என்பது விளங்குகிறது. ஆனால் நாங்களோ, உலகத்தில் உள்ளவர்களின் துன்பம் அனைத்தும் நீங்கும்விதமாக, உறுதியான மனதுடன், அனைத்திற்கும் ஆத்மாவாக விளங்கும் குருவாயூரின் ஈசனாகிய குருவாயூரப்பனை மட்டுமே நாடி நிற்கிறோம்.