Sriman Narayaneeyam - Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை (ச்லோகம் 1)
Dasaka 1 - ஸ்ரீகுருவாயூரப்பனின் மேன்மை
ஸாந்த்ராநந்தாவ போதாத்மகமநுபமிதம் காலதேசாவதிப்யாம் நிர்முக்தம் நித்யமுக்தம் நிகம சத ஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநம் அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புநருரு புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம் தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவனபுரே ஹந்த பாக்யம் ஜநாநாம் ஸாந்த்ர ஆநந்த அவபோத ஆத்மகம் அநுபமிதம் கால தேச அவதிப்யாம் நிர்முக்தம் நித்யமுக்தம் நிகம சத ஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநம் அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புந: உரு புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம் தத் தாவத் பாதி ஸாக்ஷாத் குருபவனபுரே ஹந்த பாக்யம் ஜநாநாம் सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् । अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्त्वं तत्तावद्भाति साक्षाद्गुरुपवनपुरे हन्त ! भाग्यं जनानाम्
முழுமையான ஆனந்தத்தையும் ஞானத்தையும் தன்னுடைய வடிவமாகவே உடையது; எதனுடனும் ஒப்பிட முடியாதது; காலம், தேசம் போன்ற எல்லைகளைக் கடந்து நிற்பது; வேதங்களுடைய தலைப்பாகமான ஆயிரக்கணக்கான உபநிஷத்துக்களால் கூட, நேரடியாகக் காண்பது போன்று விவரிக்க இயலாதது; இதனைக் கண்டவுடன் நமக்கு உயர்ந்த பலன்களை அளிக்கவல்லது; இப்படிப்பட்ட உயர்ந்த ப்ரஹ்மமானது, குருவாயூரில் நம்முடைய கண்களால் நேரடியாகக் காணும்படியாக நின்று ஒளி வீசுகிறது. இதனை, இங்கு அடைய, இந்த மக்கள் செய்த புண்ணியம் என்னவோ? ஆச்சரியமாக உள்ளதே!